

கீவ்,
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளின் 2 நாள் பேச்சுவார்த்தை அபுதாபியில் இந்த வாரம் நடந்தது.மேலும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகள் ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஷியா மீது உக்ரைன் 1,200-க்கு மேற்பட்ட டிரோன்களை வீசி அதிரடி காட்டி யுள்ளது. நேற்று முன்தினம் நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் இதில் 1,100-க்கு மேற்பட்ட டிரோன்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது.
எனினும் 3 பிராந்தியங்களில் சில டிரோன்கள் விழுந்து வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியாவும் 100-க்கு மேற்பட்ட டிரோன்களை வீசியது. இதில் உக்ரைனில் 2 பேர் உயிரிழந்தனர்.அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நடந்த இந்த பயங்கர தாக்குதல் இரு தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனால் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.