உக்ரைன் இராணுவ விமானம் விபத்து - 5 வீரர்கள் பலி

தலைநகர் கிவ் அருகே 14 வீரர்களுடன் சென்ற உக்ரைன் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
உக்ரைன் இராணுவ விமானம் விபத்து - 5 வீரர்கள் பலி
Published on

கிவ்,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது இராணுவ தாக்குதலை அறிவித்ததையடுத்து ரஷிய இராணுவம் உக்ரைன் மீதான போரை தொடங்கியது. உக்ரைனின் கிழக்கே உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய இராணுவம் தன்னுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது.

இதுவரை இந்த போரில் ஏறக்குறைய 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 14 பேருடன் சென்ற உக்ரைன் இராணுவ விமானம் தலைநகர் கிவ் அருகே சென்ற போது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதுகுறித்த அறிவிப்பை உக்ரைன் நாட்டின் அவசர சேவை வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து தன்னிச்சையாக நேர்ந்ததா இல்லை ரஷிய இராணுவம் தாக்கியதால் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com