#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்- இத்தாலி பிரதமருடன் ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைன் - ரஷியா இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-

மார்ச் 28, 9.36 PM

ரஷிய படைகளில் கட்டுப்பாட்டில் இருந்த இர்பின் நகரை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

மார்ச் 28, 8.00 P.M

மார்ச் 28, 5.30 P.M

உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்: ஐநா தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு 33-வது நாள் ஆகிவிட்டது. ஒரு மாதம் கடந்து விட்டாலும் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் பல நகரங்களை சுற்றிவளைத்துள்ள ரஷியா தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் ஈடு கொடுத்து போரிட்டு வருகிறது.

ரஷியாவின் தாக்குதலால், பொதுமக்கள் பலரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில், உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 39 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து இருப்பதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

மார்ச் 28, 3.55 P.M

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் இன்று நடைபெற்ற நிலையில், உக்ரைன் ரஷியா இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நடைபெற்ற பேச்சுவார்தையில் எந்தவித முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்காவின் கிரெம்ளின் கூறி உள்ளது.

மார்ச் 28, 3.30 P.M

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மேரியோபோல் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.

தற்போது வரை சுமார் 1,60,000 பேர் மின்சாரம் இன்றி அந்நகரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்களை வெளியேற்ற 26 பஸ்கள் தயார்நிலையில் இருப்பதாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரஷிய படைகள் சம்மதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். "ரஷியா எங்களுடன் விளையாடுகிறது," என அவர் கூறியுள்ளார்.

மார்ச் 28, 2.30 P.M

ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

"இரு நாடுகளும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அவர்கள் இதற்கான பாதைகளையும், மக்களை மீட்பதற்கான தேவையான நேரத்தையும் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். தற்போது அங்கு செல்ல எங்களுக்கு எந்த குழுவும் இல்லை", என்று பிபிசியிடம் சர்வதேச செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் மாட் மொரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கபட வேண்டும் என்றும், வலுக்கட்டாயமாக வெளியேற்றபடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேரியோபோல் நகரில் உள்ள பலரும் பல வாரங்களாக உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்றார்.

மார்ச் 28, 1.30 P.M

உலகின் மிக மோசமான அணுக்கதிர்வீச்சு விபத்து நடைபெற்ற செர்னோபில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதியை ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளன.

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அணுசக்தி நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செர்னோபில் மின் நிலையத்தைச் சுற்றி, ரஷியா "பொறுப்பற்ற" செயல்களில் ஈடுபட்டதாக உக்ரேனிய மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதன்காரணமாக, உக்ரைனில் மட்டுமல்லாமல் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது என்று உக்ரைன் துணை பிரதமர் எச்சரித்தார்.

மார்ச் 28, 12.30 P.M

உக்ரைனின் சமீபத்திய நிலைமை குறித்த தனது தகவல்களை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை வழங்கியுள்ளது. அதன் விவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் பிராந்தியத்தில் உள்ள ரஷிய படைகளின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை.

ரஷிய ராணுவத்துக்கு எதிரான உக்ரைனின் தரப்பு உத்வேகம் மற்றும் மன உறுதியின்மை, உக்ரைனியர்களின் ஆக்ரோஷமான சண்டைகள் ஆகியவற்றுடன் தளவாட பற்றாக்குறையை ரஷியா எதிர்கொண்டு வருகிறது.

மேரியுபோல் நகருக்கு அருகே ரஷியா அதிக இடங்களை ஆக்கிரமித்துள்ளது. அங்கு ரஷியா துறைமுகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் போது கடுமையான சண்டை நடந்து வருகிறது " என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

மார்ச் 28, 11.30 A.M

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்தப் பேச்சு வார்த்தை முடிகிறது.

இந்த தகவலை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கடும் பேர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்தால் ரஷியா உக்ரைனுடன் உடனடி பேச்சு நடத்த வேண்டும். தாமதிக்காமல் அமைதியை நிலைநாட்ட பேச்சு மிக அவசியம். அமைதியை எதிர்நேக்கி காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்

மார்ச் 28, 10.30 A.M

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயார், ஆனால் தலைவணங்காது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், நடுநிலை வகிக்கவும், அணுசக்தி இல்லாத நாடாக தன்னை பிரகடனப்படுத்தவும் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார். ஆனால், அவர்கள் தோல்வியுற்றால், 'இது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும்' என்று அவர் எச்சரித்தார்.

மார்ச் 28, 9.30 A.M

உக்ரைன் மீதான ரஷிய போர் இரண்டாவது மாதமாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ராணுவ கட்டமைப்புகளைத் தாண்டி பொதுமக்களையும் குறிவைக்கும் வகையில் அடுக்கு மாடி குடியிருப்பு, ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், குண்டுவீச்சு தவிர்ப்பு பதுங்குமிடங்கள் என ரஷிய படைகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன.

தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் கனவு கைகூடாத நிலையில், பிற நகரங்களை ரஷிய படைகள் தொடர்ந்து குறி வைக்கின்றன. உக்ரைன் மீதான போரின் முதல் கட்டம் முடிந்து விட்டதாகவும், கிழக்கு உக்ரைன் மீது கவனத்தை செலுத்தப்போவதாக அறிவித்தபோதும், ரஷியா அதை இன்னும் செயல்படுத்த வில்லை.

இந்தநிலையில் கார்கிவ் நகரில் உள்ள வரலாற்று சின்னங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடுக்கி வைத்து பாதுகாக்கபடுகின்றது. நாம் அறிந்தது போல் வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் நகரத்தை பாதுகாக்க வேண்டும் என கார்கிவ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மார்ச் 28, 8.30 A.M

உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் உக்ரைனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உக்ரைன் மக்களுடன் ஹாலிவுட் தனது பெரிய இரவின் ஒரு சிறிய பகுதியை பகிர்ந்து கொண்டது எனவும் ரஷிய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

உக்ரைன் மக்கள் தற்போது தங்கள் சொந்த எல்லைகளுக்குள் இடம்பெயர்வு, மோதல்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்ட நாங்கள் ஒரு கணம் மவுன அஞ்சலி செலுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.

மார்ச் 28, 05.28 a.m

ரஷியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் "அதிகாரத்தில் நீடிக்க முடியாது" என்று கூறியபோது, ரஷியாவில் ஆட்சி மாற்றத்திற்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறாரா என்று வாஷிங்டனில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, பைடன் அதற்கு இல்லை என்று பதிலளித்தார்.

முன்னதாக போலந்தில் ஒரு உரையின் போது பைடன் ஆரம்பக் கருத்துக்களை வெளியிட்டார், அதில் அவர் ரஷிய அதிபர் புதினை ஒரு "கசாப்புக் கடைக்காரர்" என்றும் அழைத்தார், மேலும் உலகம் "நீண்ட சண்டைக்கு" தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மார்ச் 28, 04.20 a.m

ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை நேட்டோ நாடவில்லை: ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று நேட்டோ ராணுவக் கூட்டணி தலைவர் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதினை "கசாப்புக் கடைக்காரன்" என்று முத்திரை குத்தி, "அதிகாரத்தில் நீடிக்க முடியாது" என்று கூறியதைத்தொடர்ந்து ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் இவ்வாறு கூறினார்.

மார்ச் 28, 03.30 a.m

உக்ரைன் அதிபரின் பேட்டியை வெளியிடக் கூடாது: ஊடகங்களுக்கு ரஷியா எச்சரிக்கை

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான நேர்காணலை வெளியிடுவதை தவிர்க்குமாறு ரஷியாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு, ரஷிய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் அதிபரை நேர்காணல் செய்த செய்தி நிறுவனம் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் கண்காணிப்புக் குழுவால் விநியோகிக்கப்பட்ட மற்றும் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு குறுகிய அறிக்கையில், பல ரஷிய நிறுவனங்கள் ஜெலென்ஸ்கி உடன் நேர்காணல் செய்ததாக தெரிவித்துள்ளது.

மார்ச் 28, 02.50 a.m

உக்ரைனில் துக்கம் அனுஷ்டித்தவர்கள் ராணுவ இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும்போது ஏவுகணை அபாயங்களை புறக்கணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிற்கு எதிரான போரில் கொல்லப்பட்ட உக்ரைனிய வீரர்களை அடக்கம் செய்வதற்காக நேற்று எல்விவ் நகரில் துக்கம் அனுசரிக்கத் தொடங்கியபோது, எல்விவின் வானத்தில் கரும் புகை மேகங்கள் சூழ்ந்திருந்தது. முன்னதாக முந்தைய நாள் ராக்கெட்டுகளால் தாக்கப்பட்ட எண்ணெய் கிடங்கை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் போலந்தின் எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள உக்ரைனின் மேற்கு தலைநகரில் உள்ள செயின்ட்ஸ் பீட்டர் மற்றும் பால் கேரிசன் தேவாலயத்தில் ஒரு பெரும் கூட்டம் கூடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 28, 02.10 a.m

ரஷிய அதிபர் புதினுடனான அழைப்பில், துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன் போர் நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் மற்றும் சிறந்த மனிதாபிமான நிலைமைகள் தேவை என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசி அழைப்பில் தெரிவித்தார் என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மார்ச் 28, 01.25 a.m

ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகள் போல காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் உக்ரைன் பாதுகாப்புக்கு 100 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.750 கோடி) அமெரிக்கா வழங்குகிறது.

மார்ச் 28, 12.50 a.m

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்தப் பேச்சு வார்த்தை முடிகிறது.

மார்ச் 28, 12.20 a.m

ரஷியாவுடன் நடுநிலை நிலைமை குறித்து விவாதிக்க உக்ரைன் தயாராக உள்ளது என்று ரஷிய பத்திரிகையாளர்களிடம் ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷியாவுடனான சமாதான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக நடுநிலை நிலையை ஏற்றுக்கொள்வது பற்றி விவாதிக்க உக்ரைன் தயாராக உள்ளது, ஆனால் அது மூன்றாம் தரப்பினரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மார்ச் 28, 12.05 a.m

சில உக்ரேனிய மாலுமிகள் பாம்பு தீவில் உயிரிழந்தனர் என்றும் , மற்றவர்கள் உயிர் பிழைத்து ரஷியா கைதிகள் பரிமாற்றத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com