

ஜெனிவா,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் அந்த நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்ததாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 5-ல் 3 பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.