எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டு

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷியா
Published on: 

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும்பாடு பட்டு வருகின்றன. ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக மோதல் அதிகரித்துள்ளது.

ரஷியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதாக கூறிய டிரம்ப், ரஷியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியை அறிவுறுத்தியிருந்தார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று 3 நாட்களுக்கு ரஷியா மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்தியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஜெலன்ஸ்கி கூறி வந்தார்.

இந்த நிலையில், மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் உள்ள ரியாசான் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இன்று அதிகாலை உக்ரைன் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த முயன்றதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்தது.ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, 4 ஏவுகணைகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அவற்றின் சிதைவுகள் விழுந்ததில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com