ஐநா பொதுச்செயலாளர் ரஷ்யாவுக்கு கோரிக்கை..!

ஈஸ்டரை முன்னிட்டு 4 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஐநா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.
கோப்புப் படம் AFP
கோப்புப் படம் AFP
Published on

கீவ்,

ஈஸ்டரை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய சொல்லி ஐநா தெரிவித்தும் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதி தொடர்ந்து தாக்குதலை சந்தித்தது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50-வது நாளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன், ரஷியா போன்ற நாடுகளில் இன்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்டரை முன்னிட்டு 4 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஐநா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதும் டொனெட்ஸ்க்கில் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து தெற்கு உக்ரைன் பிராந்தியங்களை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷியா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com