

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க ஒரு படையை அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஈரானால் முடக்கப்பட்டு உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க, தற்காப்பு வழிமுறைகளை பயன்படுத்த கோரி பக்ரைன் தீர்மானம் ஒன்று ஐ.நா கவுன்சிலில் கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த வரைவு தீர்மானத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க ஒரு படையை அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.
இதற்கிடையே எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என ஐ.நா பாதுகாப்பு சபையை ஈரான் எச்சரித்தது. இந்தநிலையில் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.