பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்

பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Photo Credit: AP/PTI
Photo Credit: AP/PTI
Published on

ஜெனீவா,

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் கடந்த வாரம் தற்கொலைப்படை தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இந்த தாக்குதலில், மசூதிக்கு தொழுகை நடத்த வந்த அப்பாவி பொதுமக்கள் 63 பேர் கொல்லப்பட்டனர்.

200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் லனா ஜாகி நஸிசிபே வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஷாவர் மசூதியில் நடைபெற்ற கொடூரமான மற்றும் கோழைத்தனமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com