ரஷியா நடத்தி வரும் போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி

ரஷியா நடத்தி வரும் போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
ரஷியா நடத்தி வரும் போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி
Published on

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் இதுபற்றி தெரிவிக்கையில், "மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com