கல்லறை முன் சிரிப்பு... அமெரிக்க ராணுவ மந்திரியை கடிந்து கொண்ட வீரர்; வைரலான வீடியோ

இந்த கல்லறைக்கு வெளிநாட்டு அதிகாரிகள், ஜனாதிபதிகள், பிரபல நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வருகை தந்து, அஞ்சலி செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.
அமெரிக்க ராணுவ மந்திரி
Published on: 

வாஷிங்டன்

அமெரிக்க வீரரின் கல்லறை முன் சிரித்தபடி, பேசி சென்ற ராணுவ மந்திரியை வீரர் ஒருவர் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின் ஆர்லிங்டன் நகரில், முதலாம் உலக போரின்போது நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு, வீர மரணம் அடைந்த அடையாளம் தெரியாத வீரர் ஒருவருக்காக கல்லறை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

போர் நினைவு சின்னம்

இது தேசிய அளவில் போர் நினைவு சின்னங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த கல்லறைக்கு வெளிநாட்டு அதிகாரிகள், ஜனாதிபதிகள், பிரபல நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வருகை தந்து, அஞ்சலி செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.

யாரென்று அடையாளம் தெரியாத வீரரின் நினைவாக, அவருடைய கல்லறை அமைக்கப்பட்டு, இந்த நினைவு சின்னம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் மழை, குளிர் என பார்க்காமல் அனைத்து வித பருவகாலங்களிலும் வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

குழு புகைப்படம்

இந்த நிலையில், இந்த கல்லறைக்கு அமெரிக்க பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத், மனைவி ஜெனிபர் ஹெக்சேத் மற்றும் படை தளபதி ரிக்கி பரியா, துணை தளபதி பேட்ரிக் வீவர் மற்றும் மூத்த ஆலோசகர் மற்றும் துணை உதவியாளர் தமி ரேடாபாக் ஆகியோர் சென்றிருந்தனர்.

அப்போது, கல்லறை முன்பு ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்த அவர்கள், சத்தம் போட்டு சிரித்து கொண்டும், பேசியபடியும் சென்றனர். அந்த கல்லறையை பாதுகாப்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அவர் இதனை பார்த்ததும், அவர்களை கடிந்து கொண்டார்.

பென்டகன் விளக்கம்

அவர்களிடம், வருகை தரும் பார்வையாளர்கள் அனைவரும் அமைதியை கடைப்பிடிப்பார்கள். அதற்கான சூழலை ஏற்படுத்துவார்கள். எல்லா நேரமும் மரியாதையுடன் நடந்து கொள்வர் என்று சத்தம் போட்டு கூறினார்.

இந்த தகவலை அறிந்ததும், பென்டகனின் தலைமை செய்தி தொடர்பாளர் சீன் பார்னெல் கூறும்போது, அமெரிக்காவை பாதுகாக்கும் பணியில் உயிரிழந்த ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் தியாகத்திற்கு, ராணுவ மந்திரியும், ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் எப்போதும் மதிப்பளித்திருக்கிறது. இனியும் மதிப்பளிக்கும்.

அந்த வீரர், கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் சரியாக நினைவுப்படுத்தி இருக்கிறார் என்றார்.

X