தகவல் தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்யும் இந்தியர்கள்...! ஆனால் பயனடைவது அமெரிக்கா...!

இந்தியர்களின் திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்யும் இந்தியர்கள்...! ஆனால் பயனடைவது அமெரிக்கா...!
Published on

லகத்தை டிஜிட்டல் தளங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியுள்ளது.காலை கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை நாம் பல டிஜிட்டல் தளங்களையே கடக்க வேண்டி உள்ளது. கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் போன்றவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பொழுதுபோக்கு என்பதையெல்லாம் தாண்டி தற்போது டிஜிட்டல் பலரின் வேலையோடும், எண்ணங்களோடும் ஒன்றிவிட்டது.

அப்படிப்பட்ட டிஜிட்டல் தளங்களை நிர்வகிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகின்றனர் .உலகம் முழுவதும் உள்ள பல தொழில்நுட்ப சக்திகளின் வளர்ச்சியில் சமீப காலமாக இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

மைக்ரோசாப்ட் ,கூகுள், ஷாப்பிங்கிற்கு நாம் பயன்படுத்தும் மாஸ்டர் கார்டுகள் வரை, வாழ்க்கையை எளிதாக்கியுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களில் இந்தியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.

அப்படியான ஒரு முக்கிய சோஷியல் மீடியாவான, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலாளராக ஜேக் டார்சி நேற்று பதவி விலக, அதற்கான இடத்தில் அமர உள்ளார் இந்தியரான பரக் அகர்வால்.

Elon Musk (@elonmusk) November 29, 2021

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com