

இஸ்லமபாத்,
பாகிஸ்தானில் ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பழங்குடியின பகுதியான சர்மனாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இந்த பகுதிகளை குறித்து அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு ஒன்றை குறிவைத்து அமெரிக்க விமானம் வீசிய இரண்டு ஏவுகணைகள் இலக்கை தகர்த்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் கமாண்டர் மவுலானா முஹிபுல்லா உட்பட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆப்கானிஸ்தானுடன் புதிய கொள்கைகளை பின்பற்ற இருப்பதாக அறிவித்த பிறகும், பாகிஸ்தானை வெளிப்படையாக விமர்சித்த பிறகும், இப்பகுதியில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த ஜூன் மாதம், ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹக்கானி அமைப்பின் தளபதி கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.