ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு

பாக்தாத் விமான நிலைய தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு
Published on

வாஷிங்டன்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற ராணுவ தளபதி உள்பட 7 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரிலேயே, ஈரான் ஆதரவு ராணுவ தளபதி சுலைமானை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஈரான் ராணுவ தளபதி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீதும் படை வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு ராணுவ தளபதி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் கொடியை பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த பதிவுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com