இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கூறி உள்ளார். #KhawajaAsif #India
இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
Published on

இஸ்லாமாபாத்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது புத்தாண்டு செய்தியில் தீவிரவாதிகளை அழிப்பதாக பாகிஸ்தான் பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி பெற்றுள்ளது என குற்றம் சாட்டினார்.

அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.7,500 கோடி நிதி உதவியை நிறுத்தியுள்து. இதற்கு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது.

அதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துக்களை தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது என அபாண்டமாக குற்றம் சாட்டினார்.

#KhawajaAsif | #DonaldTrump | #India

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com