

வாஷிங்டன்,
சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை கச்சா எண்ணெயின் விலை 30 சதவீதம் வரை சரிந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் உலக கச்சா எண்ணெய் சந்தை நிலவரம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ஜனாதிபதியும், சவுதி பட்டத்து இளவரசரும் உலக எண்ணெய் சந்தை நிலவரம் மற்றும் இதர பிராந்திய, இருநாடுகள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.