அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு

ஹனோய் நகரில் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்-னும் இன்று சந்தித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு
Published on

ஹனோய்,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்ப் - கிம் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்-னும் இன்று இரவு சந்தித்தனர். பின்னர் பரஸ்பரம் கை குலுக்கிக்கொண்டனர். இருநாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நாளையும் இருநாட்டு தலைவர்களும் தொடர்ந்து சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com