அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்

அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
Published on

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று கூறுகையில், டெல்லியில் வருகிற 28-ந் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசுவார்.

அப்போது, கொரோனா தொடர்பான தொடர்ந்த ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பான இருதரப்பு நலன்கள் ஆகியற்றுடன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாகவும் பிளிங்கன் விவாதிப்பார்.அவர் அன்றைய தினமே டெல்லியில் இருந்து குவைத் சிட்டிக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு அவர் குவைத் உயர் அதிகாரிகளுடன் பேசுவார். பின்னர் அவர் 29-ந் தேதி வாஷிங்டன் திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com