வியட்நாம்: ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி

தீ விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்தனர்.
வியட்நாம்: ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி
Published on

ஹனொய்,

வியட்நாமின் லம் டான்க் மாகாணத்தில் இருந்து சி மிங் நகருக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 24 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், டாங் நாய் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வேகமாக பரவிய நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பிக்க முயற்சித்தனர்.

7 பேர் பலி

ஆனாலும், இந்த தீ விபத்தில் பஸ்சில் பயணித்த 7 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 5 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com