50 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க வோல்க்ஸ்வோகன் நிறுவனம் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி

விற்பனை சரிந்து வரும் நிலையில், செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
image courtesy: Grok AI
image courtesy: Grok AI
Published on

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வோகன். கார் சந்தையில் கொடி கட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. விற்பனை சரிந்த நிலையில், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

2016-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விற்பனை சரிந்து வரும் நிலையில், செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த பணி நீக்கம் இருக்கும் எனவும் வோக்ஸ்வோகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் நிறுவனத்தின் லாபம் 55 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தனது பங்குதாரர்களுக்கு கொடுத்த அறிக்கையில் வோக்ஸ்வோகன் கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com