பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் கைகலப்பு

2 பெண் எம்.பி.க்கள் இடையிலான மோதல் காரணமாக நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதா ஒன்றின் மீது விவாதம் நடந்தது.

அப்போது ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஜாலா சைபி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஷகுப்தா ஜுமானி ஆகியோர் இடையே மசோதா தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் சைபியை ஜுமானி கன்னத்தில் அறைந்ததாகவும், அவரது கட்டை விரலை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல் சைபி தாக்கியதில் ஜுமானிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. 2 பெண் எம்.பி.க்கள் இடையிலான மோதல் காரணமாக நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டான் நாடாளுமன்றத்தில் இரு தரப்பு எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதும், அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com