கருங்கடலில் பல கி.மீ. அளவிலான இயற்கை வாயுவை கண்டறிந்துள்ளோம்; துருக்கி அதிபர் பேட்டி

கருங்கடல் கடலோர பகுதியில் பல கி.மீ. அளவில் காணப்படும் இயற்கை வாயு கண்டறியப்பட்டு உள்ளது என துருக்கி அதிபர் எர்டோகன் பேட்டியில் கூறினார்.
கருங்கடலில் பல கி.மீ. அளவிலான இயற்கை வாயுவை கண்டறிந்துள்ளோம்; துருக்கி அதிபர் பேட்டி
Published on

அங்காரா,

துருக்கி நாட்டின் அதிபர் டய்யீப் எர்டோகன் தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த டோல்மாபாச் அரண்மனையில் இருந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருங்கடலின் கடலோர பகுதியில் அதிக அளவில் இயற்கை வாயு இருப்பதனை எங்களுடைய அரசு கண்டறிந்துள்ளது.

அதிக வளங்கள் கொண்ட பகுதியில் கண்டறியப்பட்ட இந்த இயற்கை வாயுவானது ஒரு பகுதியாகும். இது, வருகிற 2023ம் ஆண்டில் இருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என கூறினார்.

கடந்த ஜூலை 20ந்தேதி துருக்கி அரசு இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் பணியை இந்த பகுதியில் தொடங்கியது. கருங்கடலில் கண்டறியப்பட்ட இயற்கை வாயு 32 ஆயிரம் கோடி கன மீட்டர்கள் அளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.

இதேபோன்று மத்திய தரைக்கடல் பகுதியிலும் இயற்கை வளங்கள் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. அதில் இருந்தும் நல்ல செய்தியை துருக்கி அரசு கொண்டு வரும் என எர்டோகன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com