கல்விக்கான முக்கியத்துவத்தை 2,000 ஆண்டுக்கு முன்பே பேசியுள்ளோம் - அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு

நாம் தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்க கூடாது என அண்ணாமலை கூறினார்.
கல்விக்கான முக்கியத்துவத்தை 2,000 ஆண்டுக்கு முன்பே பேசியுள்ளோம் - அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு
Published on

வாஷிங்டன்,

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நியூ ஜெர்சியில் தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில், 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது;

மலேசியாவாக இருக்கட்டும், சிங்கப்பூராக இருக்கட் டும். சாதாரணமாக தெருவில் இருக்கும் வியாபார நண்பர்கள் முதல் ஜனாதிபதி வரை தமிழர்கள் இருப்பதை பார்க்கிறோம். நாம் தயவு செய்து தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்க கூடாது. ஹிந்து என்கிற வட்டத்துக்குள் அடைக்ககூடாது. இஸ்லாமியர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது. கிறிஸ்துவர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது, எல்லாத்தையும் தாண்டி தமிழர் என்கிற வட்டம் பெரிய வட்டமாக இருக்க வேண்டும். அதில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

இதனை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு காரணம், நம்முடைய தமிழ் மொழியில் புறநானூறு ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிற்கக்கூடிய அற்புதமான நூல். அதில் 182ம் பாடலை படிக்க வாய்ப்பு இருந்தால் உங்கள் குழந்தைகளை படிக்கசொல்லுங்கள். உண்டாலம்ம, இவ்வுலகம் என்ற பாடலாகும்."

ஒரு தமிழன் எப்படி இருக்கவேண்டும்என்றால் வேண்டும். சினம்கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். அமிர்தமே கிடைத்தாலும் அதனை பகிர்ந்து உண்ண, தூங்காமல், அஞ்சாமல் உழைத்து, புகழுக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

உலகையே கூலியாக கொடுத்தாலும் சான்றோர் பழிச்சொல் கிடைக்க பெறாத தமிழ் இனமாக இருக்க வேண்டும். தன் முயற்சியை பிறர் நலனுக் காக ஆக்குபவர்களாக இருக்க வேண்டும். கல்விக்கான முக்கியத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com