

நியூயார்க்,
உணவு விடுதியில் மிச்சம், மீதியாக உள்ளவற்றை உண்பது எந்தளவுக்கு ஆபத்து என்பதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடந்த நிகழ்வு உள்ளது.
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உணவு விடுதி ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். அவர் அந்த உணவகத்தில் மிச்சம், மீதி இருந்த உணவை சாப்பிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக வாந்தி, நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிக்கல், பலவீனம், கழுத்து பகுதியில் பாதிப்பு மற்றும் கண்பார்வை மங்குதல் ஆகியவை ஏற்பட்டு உள்ளன.
அவரது தோல் நிறமும் மாற்றம் அடைந்து உள்ளது. அதிர்ச்சி, உறுப்புகள் பல செயலிழத்தல் ஆகியவற்றால், மசாசூசெட்ஸ் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று உள்ளனர். அவரது உடல் வெப்பநிலை 105 டிகிரியாக உயர்ந்து உள்ளது. அவரது இருதய துடிப்பு நிமிடம் ஒன்றிற்கு 166 முறை துடித்துள்ளது. அவரது சுவாசம் மோசமடைந்து உள்ளது. இதனால் அவருக்கு பிராணவாயு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி மருத்துவர் பெர்னார்டு சூ கூறும்போது, பரிசோதனை முடிவில் அவருக்கு நெய்சீரியா மெனிங்கிடிடிஸ் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் பாக்டீரியா கலந்து விட்ட பின்பு, உடலின் ஒட்டுமொத்த ரத்த நாளங்களும்
ரத்த அழுத்தம் குறைந்து, உறுப்புகளுக்கு பிராணவாயு செல்வது தடுக்கப்படுகிறது என கூறியுள்ளார். பல்வேறு சிக்கல்களை சந்தித்த அந்த மாணவருக்கு 10 விரல்களையும், கால் மூட்டுக்கு கீழ் உள்ள பகுதியையும் எடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்றை பெர்னார்டு சூ நடத்தி வரும் யூடியூப் சேனலான சப்பியெமுவில் வெளியிட்டு உள்ளார்.