எச்1-பி விசா கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் நிறுவனங்கள் எவை?

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ‘எச்1-பி’ விசா கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
எச்1-பி விசாதாரர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்திருக்கும் நடவடிக்கையால் ஏராளமான சர்வதேச நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன.இதில் முதலிடத்தில் அமேசான் உள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்த நிறுவனம் மேற்படி விசா மூலம் 10,044 தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது.
2-ம் இடத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 5,505 தொழிலாளர்கள் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் மைக்ரோசாப்ட் (5,189), மெட்டா (5,123), ஆப்பிள் (4,202), கூகுள் (4,181) டெலாய்ட் (2,353), இன்போசிஸ் (2,004), விப்ரோ (1,523) மற்றும் டெக் மஹிந்திரா அமெரிக்காஸ் (951) நிறுவனங்கள் உள்ளன.
Related Tags :
Next Story






