நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 37 வயது புதிய காதலி...?

தாவூத் இப்ராஹிம் தற்போது ஒரு பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என பாகிஸ்தான் மீடியாக்களே தெரிவித்து வருகின்றன.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 37 வயது புதிய காதலி...?
Published on

கராச்சி

இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.

தாவூத் இப்ராஹிம் கராச்சியில் ஆடம்பரமான பகுதியில் ஒரு அரண்மனை பங்களாவில் வசித்து வருகிறார், மேலும் அவர் பாகிஸ்தான் திரைப்படத் துறையில் உள்ள பல நடிகைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தாவூத் தற்போது ஒரு பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என பாகிஸ்தான் மீடியாக்களே தெரிவித்து வருகின்றன.

சினிமா துறைக்கும் நிழல் உலகத்திற்கும் மறைமுக தொடர்புகள் உள்ளன.பாலிவுட்டுக்கும் பாதாள உலகத்துக்கும் இடையிலான உறவு குறித்து நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு காலத்தில், தாவூத் இப்ராஹிம் பாலிவுட்டில் மிகுந்த செல்வாக்கு பெற்று இருந்தார். மேலும் அவர் பல பாலிவுட் படங்களில் முதலீடு செய்தார்.

பல இந்திய நடிகர்கள் அவரது வீட்டு விருந்துகளிலும் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தானுக்கு ஓடிய பிறகும் தாவூத்தின் திரையுலகின் ஆர்வம் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் ஒரு பெரிய கவுரவ விருது 'தம்கா-இ-இம்தியாஸ்' பாகிஸ்தான் நடிகைக்கு வழங்கப்பட்டபோது, பாகிஸ்தான் திரையுலகத்துடனான தாவூத்தின் உறவு 2019 ல் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நடிகையின் பெயர் 37 வயதான மெஹ்விஷ் ஹயாத். சுவாரஸ்யமாக, மெஹ்விஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்பட்ட முகம் அல்ல, ஆனால் இப்போது அவர் பாகிஸ்தானின் ஊடகங்கள் மற்றும் கவர்ச்சித் துறையின் பிரபலமான முகமாக மாறிவிட்டார்.

மெஹ்விஷ் ஹயாத்துக்கு கவுரவ விருது வழங்கிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவு குறித்து பலர் கேள்வி எழுப்பினார்கள்.

மஹ்விஷுக்கு இவ்வளவு பெரிய மரியாதை வழங்கப்பட்டிருப்பதை அறிந்து பாகிஸ்தான் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது.

மெஹ்விஷ் தாவூத் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்தார் என்று கூறப்படுகிறது. கராச்சியைச் சேர்ந்த ஒரு செல்வாக்கு மிக்க நபருடனான நெருக்கம் காரணமாக மெஹ்விஷ் பல பெரிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புகளைப் பெற்றார். மெஹ்விஷின் செல்வாக்கு உயர்வு, தாவூத் திரைப்படத் துறையில் இன்னும் நிறைய செல்வாக்கு உள்ளது என்பதை காட்டுகிறது அவர் நினைத்தால் யாருடைய வாழ்க்கையையும் உருவாக்க முடியும் என்பதையும் காட்டுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com