இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி கைது

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ராஜபக்சே குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன
ராஜபக்சே மனைவி
Published on: 

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள் குழு அவரை கைது செய்தது. இலங்கையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிபராகவும், 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் அதிகாரத்தில் கோலோச்சியவர் ராஜபக்சே.

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜனமுன்னணி கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுர குமரா திசநாயகே பதவியேற்றுள்ள நிலையில், ஊழல் வழக்குகளை ராஜபக்சே குடும்பம் எதிர்கொண்டுள்ளது.

மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே போர் விமான கொள்முதல் முறைகேடு தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளார். அதேபோல அவரது மகன் நமல் ராஜபக்சேவும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஊழல் முறைகேடு புகாரில் மகிந்த ராஜபக்சேவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள், கைது செய்து அழைத்து சென்றனர். அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றில் இருந்து 10 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் ரூ.1 கோடி) பெற்றதாகவும், அந்தத் தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிராந்தி ராஜபக்ச சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com