காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் - டொனால்டு டிரம்ப்

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் - டொனால்டு டிரம்ப்
Published on

நியூயார்க்,

ஐ.நா. பொதுச்சபையின், 74வது ஆண்டு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.

முன்னதாக இந்திய வம்சாவளியினர் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டனர். உரை நிகழ்த்திய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச்சபையின் 74 வது அமர்வில் பங்கேற்க நியூயார்க் சென்றார்.

அங்கு ஐ.நா. பொதுச்சபை உச்சிமாநாடு உள்பட ஒன்பது முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் இன்று நியூயார்க் வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com