துணை விமானியுடன் போராடி மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டது எப்படி? இந்திய விமானி பரபரப்பு பேட்டி

அபுதாபியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார், படிப் படியாக குணமடைந்து வருகிறார்.
 இந்திய விமானி பரபரப்பு பேட்டி
Published on: 

துபாய்,

'பிளைதுபாய் விமானத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயிர் தப்பிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

துபாயில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 'பிளைதுபாய்' விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமா னத்தை இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் இயக்கினார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது. ஓமனைச் சேர்ந்த துணை விமானி திடீரென அவசரகால கோடரியால் விமானி ஸ்மித் மச்சாரை தாக்கினார்.

தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம்

இந்த எதிர்பாராத தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையிலும், விமானி ஸ்மித் மச்சார் சக விமானி மற்றும் பயணிகளின் உதவியுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பெரும் அசம் பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது அபுதாபியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார், படிப் படியாக குணமடைந்து வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தக வல்கள் வெளியானது. அதாவது தாக்குதல் நடத்திய துணை விமானி, விமானத்தைக் கடத் திச் சென்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது மோதி, தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், விமானத்தில் நடந்த சதியை முறியடித்து, தான் மரணத் தின் விளிம்பில் இருந்து மீண்டது எப்படி என்பதை அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தபடி அவர் ஐக்கிய அரபு அமீரக ஊடகங்க ளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இப்படியே இறந்துவிடக்கூடாது

விமானத்தின் காக்பிட்டில் நான் கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வித மாக எனது தலையின் பின்புறத்தில் பலத்த அடி விழுந்தது. இதனால் நிலைகுலைந்த நான் மயக்க நிலைக்குச் சென்று திரும்பினேன். அப்போது என் உள்மனதில், "ஸ்மித், எதாவது செய்... நீ இப்படியெல்லாம் இறந்துவிடக் கூடாது" என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். அந்த தருணத்தில் என் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. அதுதான் என்னையும், நூற்றுக்கணக்கான பயணிகளையும் காப்பாற்றியது.

காயங்களுடன் போராடி, நான் எப்படியோ காக்பிட் கதவை திறந்தேன். உடனடியாக மற்ற ஊழியர்களும், பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய ஓமன் துணை விமா னியை மடக்கிப் பிடித்தனர். அந்த இக்கட்டான சூழலில் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கிய சக விமானி யின் துணிச்சலான செயலை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com