700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அடுக்கடுக்காக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இங்கிலாந்து எம்.பி.

2010-ம் ஆண்டு வழக்கு ஒன்று விசாரணையின்போது, 5 ஆண்களுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அடுக்கடுக்காக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இங்கிலாந்து எம்.பி.
Published on

லண்டன்

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி. ரூபர்ட் லோவ் பேசும்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். அந்நாட்டில் தனிப்பட்ட கும்பல்களால், பாலியல் சுரண்டல்களில் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுமிகள், இளம்பெண்கள் தொடர்பாக அடிக்கடி தகவல்கள் வெளிவந்தன. அதில் ஈடுபட்டவர்கள் யாரென்பது விசாரிக்கப்பட்டு வந்தது.

இதுபற்றி எம்.பி. லோவ் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். அதில், அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை அவர், நாடாளுமன்றத்தில் பேசும்போது வெளியிட்டார். அவர் கூறும்போது, வெள்ளையின இங்கிலாந்து சிறுமிகளை இன ரீதியாக தாக்கியுள்ளனர் என்று கூறினார்.

பாலியல் வன்கொடுமை

இதில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் அளித்த பல்வேறு வாக்குமூலங்களை சுட்டி காட்டிய அவர், அதில் இருந்து இனம் சார்ந்த ஒரு தாக்குதல் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார். அதில், கர்ப்பிணியாக உள்ள பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என கூறியுள்ளார்.

வேறொரு தகவலில், குழந்தையின் முகத்தில் சிகரெட் கொண்டு சுட்டு, கொடுமைப்படுத்தி உள்ளனர். தாக்குதலுக்கு ஆளான மற்றொரு சிறுமி கூறும்போது, ஜேக் டேனியல்ஸ் என்ற மதுபான பாட்டிலின் ஒரு பகுதியை பிறப்புறுப்பில் நுழைத்தனர். அப்போது 12 அல்லது 13 வயது இருக்கும் என கூறியுள்ளார்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல போலீஸ் அதிகாரிகளால் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இன்னொரு சம்பவத்தில், உன்னுடைய கடவுள் எங்கே? உனக்காக கடவுள் வருவாரா? என கேட்டு மற்றொரு இளம்பெண்ணின் கிறிஸ்தவ மத நம்பிக்கையை குலைக்கும் வகையில் சிலர் கேட்டுள்ளனர். மற்றொரு இளம்பெண் கூறும்போது, இனம் சார்ந்த தாக்குதலையே பார்த்தேன். என்னை இன ரீதியாக பாதிக்க செய்ததுடன், என்னுடன் பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் கூட வெள்ளையின பெண்களாகவே இருந்தனர் என்றார்.

நாய் கூண்டு

இதேபோன்று இன்னொரு டீன்-ஏஜ் சிறுமி கூறும்போது, வேன் ஒன்றில் அனைவரும் வெள்ளையின சிறுமிகளாக இருந்தனர். நாய் கூண்டுகளில் 15 முதல் 20 சிறுமிகள் அடைக்கப்பட்டு இருந்தனர் என்று கூறினார். இதனை வேதனையுடம் எம்.பி. லோவ் வெளியிட்டார்.

பாலியல் சுரண்டல்

இங்கிலாந்து நாட்டில் 2002-ம் ஆண்டில் இதுபோன்ற சம்பவங்கள் முதன்முறையாக வெளியே தெரிய வந்தன. பாகிஸ்தான் பாரம்பரியம் கொண்ட ஆண்களே கும்பல் கும்பலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாலியல் சுரண்டலில் ஈடுபட்டனர். இதில், 2010-ம் ஆண்டு வழக்கு ஒன்று விசாரணையின்போது, 5 ஆண்களுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சவுத் யார்க்ஷைர் பகுதிக்கு உட்பட்ட ரோதர்ஹாம் நகரில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட பல சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளானார்கள். அப்போது இந்த கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

இதில், கொடுமை என்னவெனில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தன்னார்வலர்கள் புகார் அளித்தும் பல வழக்குகளில் பல ஆண்டுகளாக அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com