உக்ரைன், அமெரிக்கா, ரஷியா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி ஆதரவு

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன், அமெரிக்கா, ரஷியா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி ஆதரவு
Published on: 

ஒஸ்லோ,

ரஷியா-உக்ரைன் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் பல்வேறு தூதரக முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகருக்குச் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கு அமெரிக்கச் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காபை நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, போரைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகிய 3 பேரும் இணைந்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்றும், இதில் ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் தற்போதைய தூதரக முயற்சியால் ரஷியாவிடம் இருந்து விரைவில் நல்ல முடிவு வரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com