பதினான்காம் போப் லியோவுடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு

ரஷியா - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போப் தனது வருத்தங்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.
பதினான்காம் போப் லியோவுடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு
Published on

ரோம்,

இத்தாலி தலைநகர் ரோமில் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் உக்ரைன் மீட்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இத்தாலிக்கு வருகைத் தந்துள்ளார். இதையடுத்து, ரோமிலுள்ள வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப்-ன் கோடைக்கால தங்குமிடமான காஸ்டல் கண்டொல் போவில், போப் பதினான்காம் லியோவை சந்தித்து அவர் பேசினார்.

இந்தச் சந்திப்பில், அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை உக்ரைன் மீட்க உதவிய, பேராலயத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாகவும், இருவரும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அவசர தேவையைக் குறித்து கலந்துரையாடியதாகவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்காக போப் தனது வருத்தங்களைத் தெரிவித்ததுடன், கைதிகளின் விடுதலைக்கு இருதரப்பும் இணைந்து முடிவுக்காண வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com