

வாஷிங்டன்,
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,612வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ரஷியா உடனான போர் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், அமெரிக்காவிடமிருந்து கூடுதல் ஆயுதங்கள் வாங்க உக்ரைன் முயற்சித்து வருவதாகவும், அதுதொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைமாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.