

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, கடந்த 28-ம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுடன் இணைந்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்ளிட்ட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மோதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: “மேற்கு ஆசியாவில் உள்ள சூழல் கவலை அளிக்கிறது. உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். பதற்றம் ஏற்பட்டுள்ள நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.கனடா பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி இந்த தகவலை தெரிவித்தார்