பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுமார் 100 அடி உயரமுள்ள 2-வது மாடியில் இருந்து நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதில் அவரது மண்டை உடைந்து, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போலீசார், பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. தற்கொலைக்கு முன்பாக அந்த வாலிபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த படம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து அந்த வாலிபர் யார்? என்பதை பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com