ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் தேர்வு

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் தேர்வு
Published on

குண்டூர்,

கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.

கட்சியின் தலைவராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேர்தல் அலுவலர் உம்மாரெட்டி வெங்கடேஸ்வரலு அறிவித்தார். 20 பேர் தலைவர் பதவிக்கு மனு செய்தனர். அந்த 20 மனுக்களிலும் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரே குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து 3வது முறையாக கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com