நோக்கியா சி 32

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சி 32 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா சி 32
Published on

குறைந்த விலையில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. 1.6 கிகாஹெர்ட்ஸ் திறன் ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினைவகம் உடையது. இதை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. சார்கோல், மின்ட், பிங்க் நிறங் களில் கிடைக்கும். 64 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.8,999. 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.9,499.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com