கொரோனாவுக்கு மூதாட்டி பலி

புதுவையில் இன்று கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி பலி
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 784 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று 15 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 2 பேர், வீடுகளில் 135 பேர் என 137 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,975 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 13 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 141 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 208 பேரும் செலுத்திக்கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com