சாராயக்கடையில் முதியவர் பிணம்

திருநள்ளாறு அடுத்த அத்திப்படுகை சாராயக்கடையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சாராயக்கடையில் முதியவர் பிணம்
Published on

கோட்டுச்சேரி

திருநள்ளாறு அடுத்த அத்திப்படுகையில் சாராயக்கடை உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருநள்ளாறு போலீசார் சாராயக்கடைக்கு விரைந்து சென்று, பிணமாக கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த முதியவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நாகை கொத்தான் குளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 69) என்பதும், சாராயம் குடித்தபோது நெஞ்சுவலியால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com