ஒன் பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன்

ஒன் பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன்
Published on

பிரிமீயம் மாடல் ஸ்மார்ட்போனைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் புதிதாக நார்ட் 3 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.74 அங்குல அமோலெட் திரை, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் இடம் பெற்றுள்ளது. இதில் ஆக்டாகோர் டைமென்சிடி பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதியும் கொண்டது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை சென்சார் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 80 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. பச்சை, கிரே வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.33,999. 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.37,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com