எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நாளை டெல்லி பயணம்

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நாளை டெல்லி பயணம்
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் கடந்த 21-ந் தேதி டெல்லி சென்றனர். அங்கு 22-ந் தேதி நடைபெற்ற காங்கிரசின் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

இந்த நிலையில் சித்தராமையா மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லி செல்கிறார். இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com