அமெரிக்கா- ஈரான் போரில் வெற்றி யாருக்கு?

போரால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கே வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்கா- ஈரான் போரில் வெற்றி யாருக்கு?
Published on

உலகமே முன்னேற்ற பாதையில் பீடு நடை போட்டுக்கொண்டு இருந்த நிலையிலும், செயற்கை நுண்ணறிவு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த நேரத்திலும், அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை திடீரென்று 'பிரேக்' போட்டால் அது நிலைகுலைந்து செல்வதற்கும், சில நேரங்களில் கவிழ்வதற்கும் வாய்ப்பு இருப்பது போல ஒரு நிலைமை இப்போது அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் "போர், இது போர்" என்று முழங்கியது போல, அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கும் இடையே போர் மிக உக்கிரமாக நடந்து வருகிறது. ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த காமேனி ஏவுகணை தாக்குதலால் கொல்லப்பட்ட பிறகும், இந்த போரின் வீரியம் குறையவில்லை. "கெடிகாரம் உன்னுடையது, ஆனால் அது காட்டும் நேரம் என்னுடையது" என்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான்களின் யுக்தியைப் போன்ற போர் தந்திரத்தை ஈரான் பயன்படுத்தி வருகிறது.

Also Read
திமுகவில் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனு நிறைவு - வரலாறு காணாத வகையில் 15,372 மனுக்கள் குவிந்தது
அமெரிக்கா- ஈரான் போரில் வெற்றி யாருக்கு?

இந்த போரில் இதுவரை யாருக்கு வெற்றி? என்று கணக்கிட்டால், அமெரிக்காவுக்கும் வெற்றி இல்லை; ஈரானுக்கும் வெற்றி இல்லை. அதுபோல அமெரிக்காவுக்கும் தோல்வி இல்லை; ஈரானுக்கும் தோல்வி இல்லை. ஆனால் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், இந்த போரால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கே வெற்றி கிடைத்துள்ளது. விலைவாசி இப்போது அதிகமாக உயரவில்லை என்றாலும், விரைவில் உயரப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படப்போவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. அமெரிக்காவுக்கும் இந்த போரினால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படப்போகிறது. ஈரான் ஏவும் சாதாரண ஏவுகணையின் தயாரிப்பு செலவு அதிகபட்சமாக ரூ.18 லட்சம்தான். ஆனால் அதை வானிலேயே தடுத்து நிறுத்தி சுட்டு வீழ்த்த தேவையான "தேசபக்தன்" என்ற வான் கவசத்தை பயன்படுத்தும் அமெரிக்காவுக்கு ரூ.3 கோடி செலவாகிறது.

Also Read
வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் - பட்டியல் போடும் மீனாட்சி சவுத்ரி
அமெரிக்கா- ஈரான் போரில் வெற்றி யாருக்கு?

அமெரிக்கா 100 சதவீத வெற்றியோடு ஈரானின் டிரோன்களை வீழ்த்தினாலும், நிதி ரீதியாக ஒவ்வொரு நிமிடமும் இழந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் வலிமை என்பது அதன் வலிமைமிக்க போர்க் கப்பல்கள் மற்றும் நவீன விமான தளங்களாகும். ஆனால் கடந்த ஒரு வார காலமாக அவை மலிவான ஈரான் ஏவுகணைகளுக்கு மிகப்பெரிய இலக்குகளாக மாறிவிட்டன. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகையான 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எழுதியுள்ள கட்டுரையில், கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு விமானந்தாங்கி கப்பலை தற்காத்துக்கொள்ள அமெரிக்கா இடைவிடாது ஏவுகணைகளை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கப்பலில் ஒரு சிறிய ஓட்டை விழுந்தாலும் கூட அது அமெரிக்காவின் கவுரவத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆனால் ஈரானோ இழந்தால் மலிவான டிரோன்களை மட்டுமே இழக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read
அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர்களை இதர பணியில் ஈடுபடுத்தக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு
அமெரிக்கா- ஈரான் போரில் வெற்றி யாருக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, ஈரானும் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் பல நாடுகள் தங்கள் கப்பல்களை அதன் வழியாக கொண்டு வர முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கின்றன. ஈரான் பல நாடுகளில் நடத்திய தாக்குதலால் இந்தியாவிலும் எல்.என்.ஜி., சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வரும் அபாயம் உள்ளது. இதனால் வீடுகளில் உள்ள சமையலறை தொடங்கி மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகள் வரை அதன் தாக்கத்தை உணர வேண்டிய நிலை வந்துவிடுமோ? என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com