இந்த வார விசேஷங்கள் : 8-ந் தேதி மாசி மகம்

3-3-2020 முதல் 9-3-2020 வரை
இந்த வார விசேஷங்கள் : 8-ந் தேதி மாசி மகம்
Published on

3-ந் தேதி (செவ்வாய்)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி.

நத்தம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம், இரவு மின் விளக்கு அலங்கார தாமரை மலரில் அம்மன் பவனி.

கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம், இரவு மகிஷா சூரன் சம்ஹார லீலை.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருவீதி உலா.

சமநோக்கு நாள்.

4-ந் தேதி (புதன்)

கோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் ரத உற்சவம்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

காரமடை அரங்கநாதர் சிறிய திருவடியில் திருவீதி உலா.

திருச்செந்தூர் முருகப்பெருமான் வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் யானை வாகனத்தில் புறப்பாடு.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி.

மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (வியாழன்)

முகூர்த்த நாள்.

சுமார்த்த ஏகாதசி.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் ரத உற்சவம்.

கோயம்புத்தூர் கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் உலா.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல்.

சமநோக்கு நாள்.

6-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

வைஷ்ணவ ஏகாதசி.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.

இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாண உற்சவம்.

காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம்.

திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

கோயம்புத்தூர் கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.

பெருவயல் முருகப்பெருமான் காலை விஷ்ணுவாம்சம், இரவு குதிரை வாகனத்தில் பவனி.

மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (சனி)

சனிப்பிரதோஷம்.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான்- வள்ளி திருமண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் தங்க கயிலாய பர்வதம், அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் வீதி உலா.

பெருவயல் முருகப்பெருமான் புஷ்பக விமானத்தில் திருவீதி உலா.

மதுரை இம்மையில் நன்மை தருவார் புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (ஞாயிறு)

மாசி மகம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.

கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்.

மதுரை இம்மையில் நன்மை தருவார் மாசி மக தீர்த்தம்.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தீர்த்த உற்சவம், இரவு இந்திர விமானத்தில் உலா.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருமலைராஜன் பட்டணம் எழுந்தருளல்.

கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (திங்கள்)

ஹோலி பண்டிகை.

பவுர்ணமி.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தெப்ப உற்சவம்.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை தரிசனம், பால்குட ஊர்வலம்.

கீழ்நோக்கு நாள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com