உலக ஜூனியர் தடகள போட்டி: இந்திய அணியில் தமிழக வீரர்- வீராங்கனைகள்

தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்க னைகள் இடம் பிடித்து இருக்கின்றனர்.
உலக ஜூனியர் தடகள போட்டி: இந்திய அணியில் தமிழக வீரர்- வீராங்கனைகள்
Published on

சென்னை,

உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள யுஜின் நகரில் நாளை (5-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி யில் பங்கேற்கும் 36 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 10 வீரர், வீராங்க னைகள் இடம் பிடித்து இருக்கின்றனர்.

உலக ஜூனியர் தடகள போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர்-வீராங்கனைகள் வருமாறு,

இவின் ஆனந்த் (800 மீட்டர் ஓட்டம்). ஜிதின் அர்ஜூனன் (நீளம் தாண்டுதல்), நீல் சாம்ராஜ், ரஞ்சித் குமார், நகுல் பிரபு (மூவரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்), தரணிதரன் (ஈட்டி எறிதல்), அம்ப்ரிஷ் (உயரம் தாண்டுதல்), ராய்ஷன் (டிரிபிள் ஜம்ப்), பவானா, தியா (இருவரும் 400 மீட் டர் தொடர் ஓட்டம்).

X

Daily Thanthi
www.dailythanthi.com