புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.
புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்
Published on

அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கும் படத்தை 'நீலம் புரொடக்சன்ஸ்' சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளார். 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு 'J.பேபி' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். அந்த போஸ்டரில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, லொள்ளு சபா மாறன் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com