பங்குனி உத்திரம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை

பங்குனி உத்திரத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து காலை முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் குடங்கள், பால்காவடிகள் ஆகியவற்றின் மூலம் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 11.30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதையடுத்து சுவாமி வீதி உலா வருகிறார்.

பங்குனி உத்திரம் என்பதால் திரளான பக்தர்கள் பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானை தரிசிக்க வருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com