நோயை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய 9 வழிமுறைகள்!

credit: freepik
தடுப்பூசி: ஒவ்வொரு ஆண்டும் பருவகால நிலை மாறும் சூழலின்போது வைரஸ் காய்ச்சல் பரவும். சிலருக்கு ஆண்டுதோறும் காலநிலை மாறும்போது தவறாமல் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும். அதனை தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது அவசியமானது.
credit: freepik
மதுபானத்தை தவிருங்கள்: மதுவில் இருக்கும் அதிகப்படியான ஆல்கஹால், உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை திறம்பட கொல்லும் ரத்த வெள்ளை அணுக்களின் செயல் திறனை குறைத்து விடும். அதனால் மதுப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
credit: freepik
சர்க்கரையைத் தவிருங்கள்: மதுவை போலவே, சர்க்கரையும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடும் ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை முடக்கிவிடும். அதனால் சர்க்கரையை கூடுமானவரை தவிர்ப்பதோ அல்லது குறைவாக உட்கொள்வதோ நல்லது.
credit: freepik
தூய்மையை பேணுங்கள்: செல்போன், கதவு கைப்பிடிகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் உள்பட அடிக்கடி உபயோகப்படுத்தும் பொருட்களில் பாக்டீரியா இருக்கும். எனவே இந்த பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அது பாக்டீரியா, கிருமிகள் உருவாக்கும் நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும்.
credit: freepik
குடல் ஆரோக்கியம்: உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் குடலில்தான் அமைந்துள்ளது. யோகர்ட் போன்ற புரோபயாடிக்குகளை கொண்டிருக்கும் உணவுப்பொருட்களை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை காக்கும்.
credit: freepik
நகங்களை கடிக்காதீர்கள்: நகங்களை கடிக்கும்போது அதனுள் படிந்திருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வாய், மூக்கு வழியாக உள் நுழைந்து நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கு வழிவகுத்து விடும். கைகளை சோப் அல்லது சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
credit: freepik
உடற்பயிற்சி: தினமும் மிதமான உடற்பயிற்சி செய்தாலே போதும். அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்திவிடும். உடற்பயிற்சி வழக்கம் சீரான நிலையில் தொடர வேண்டும்.
credit: freepik
சுத்தமான காற்றை சுவாசியுங்கள்: சில நேரங்களில், அலுவலகம் அல்லது வீட்டிற்குள் சூடான காற்றை சுவாசிப்பது நோய்வாய்ப்பட வழிவகுக்கும். ஏனெனில் மூடப்பட்ட அறைக்குள் சூழ்ந்திருக்கும் காற்றில் வெப்பம் மிகுந்திருக்கும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களும் கலந்திருக்கும்.
credit: freepik
சமச்சீரான உணவு: கொழுப்பு நிறைந்த மீன்கள், புதிய பழங்கள் மற்றும் கீரைகள் போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகளைச் சேர்க்கவும்.
credit: freepik
Explore