ஒருசில சமையல் டிப்ஸ்..!

freepik
கீரைக்கூட்டுக்கு தேங்காய் அரைத்து செய்வதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி கூடும்.
தேங்காய் பர்பி செய்யும் போது 2 டீஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் சுவை கூடும்.
metaAI
தேங்காயை உடைத்து முதலில் கண் உள்ள பாகத்தை உபயோகிக்க வேண்டும், அந்தப் பகுதி தான் விரைவில் கெட்டுப்போகும்.
metaAI
பாகற்காய் குழம்பு செய்யும் போது நான்கு துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது.
metaAI
கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.
metaAI
தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
metaAI
மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
metaAI
மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.
metaAI
பூண்டு வாங்கியவுடன் உதிர்த்து வைத்தால் வீணாகாமல் இருக்கும்.
metaAI
Explore