metaAI
metaAI

தாய்மார்களுக்கு ஒருசில சமையல் டிப்ஸ்..!

Published on
நெய் காய்ச்சுவதற்கு முன்பு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து பின்பு காய்ச்சினால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாது.
metaAI
அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.
metaAI
தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.
metaAI
மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.
metaAI
சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.
metaAI
அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.
metaAI
வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.
metaAI
உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.
metaAI

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com