நன்மைகளைஅள்ளித்தரும் நவாசனம்..!

அதிகாலை எழுந்தவுடன் பரிபூரண நவாசனம் செய்தால் மனமும் உடலும் வளமாகும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம்.
முகப்பொலிவு: இந்த ஆசனம் முகத்திலுள்ள எல்லா தசைகளும் நன்கு பளபளப்பாக இருக்க உதவுகின்றது. முகம் முழுவதும் ரத்த ஓட்டம் சிறப்பாக பாயும். முகமலர்ச்சியை தரமுகமலர்ச்சியை தருகின்றது.
குடல் சுத்தம்: சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகின்றது. இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடும்.
மூன்று முதுகுவலி: கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி மூன்றையம் வராமல் தடுக்கும் அருமையான ஆசனமிது.
குடல் இறக்கம்: குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது. வயிற்றுப்போக்கு அதிகமாக சென்றால் உடன் இந்த ஆசனம் செய்தால் சரியாகிவிடும்.
சிறுநீரக உறுப்பு: சிறுநீரகப்பை, சிறுநீரக உறுப்பை வலுவாக்கி, அதன் குறைபாடுகளை அகற்றுகின்றது.
அதிக வயிற்றுத் தசை: அதிக வயிற்றுத் தசையை குறைத்து அழகாக, மிடுக்காக, சுறுசுறுப்பாக வாழ வழி வகை செய்கின்றது.
இடுப்பு வலி: இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப் பிரசாதமாகும். இடுப்பு வலியை நீக்குகின்றது.
ஆண்மைக் குறைவு:- ஆண்மைக் குறைவை நீக்குகின்றது. பெண்களுக்கான மாதவிலக்கு நாட்களில் வரும் பிரச்சனை, வயிற்று வலி, நாள் தள்ளிப் போதல் போன்ற வியாதிகளை நீக்குகின்றது.
குறிப்பு:- முதுகுவலி அதிகம் உள்ளவர்கள் முதுகில் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்தவர்கள் இந்த ஆசனத்தை தனியாக செய்ய முயற்சிக்க வேண்டாம்.
Explore