ஆரோக்கியம் நிறைந்த 'புரோட்டீன் ஷேக்' செய்முறை!

credit: freepik
தசை வளர்ச்சிக்கு இந்த புரோட்டீன் ஷேக்குகளை குடிப்பது நல்லது. வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான புரோட்டீன் ஷேக்கை விட சிறந்தது எதுவுமில்லை. எவ்வாறு வீட்டிலேயே எளிதாக புரோட்டீன் ஷேக் செய்யலாம் என்று பார்க்கலாம்.
credit: freepik
தேவையான பொருட்கள்: பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 4 கப், தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை - ½கப், ஓட்ஸ் -½கப், பால் பவுடர் - 1 கப், பொடித்த சர்க்கரை - 1 கப்
credit: freepik
செய்முறை: வெறும் வாணலியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஓட்ஸ் இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்காமல் வறுக்கவும்.
credit: freepik
அவை ஆறியதும், வேர்க் கடலையையும் சேர்த்து மிக்சியில், குறைந்த வேகத்தில் மிருதுவாக அரைக்கவும்.
credit: freepik
அரைத்தது ஆறியதும், பால் பவுடர், பொடித்த சர்க்கரை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து காற்றுபுகாத பாட்டிலில் போட்டு மூடி குளிர்பதன பெட்டியில் வைக்கவும்.
credit: freepik
தேவைப்படும்போது இதிலிருந்து 3 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து கலந்து சூடாகக் குடிக்கலாம்.
credit: freepik
மேலும் இந்த பவுடரை பாலில் கலந்து குழந்தைகளுக்கு பருகுவதற்கு கொடுக்கலாம். இது உடம்புக்கு சத்தும் தெம்பும் தரும்.
credit: freepik
Explore